கம்பவர்மன் என்பவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். இவன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த புதல்வன். நிருபதுங்கவர்மன் பல்லவப் பேரரசின் தென்பகுதியை ஆண்டபோது, இவன் வடபகுதியை ஆண்டுவந்தான். கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் விஜயா இவனின் மனைவி ஆவாள். இவர்களின் புதல்வன் அபராசித வர்மன்[1].
இவன் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காட்டு ஊரிலுள்ள சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன[2].
மேற்கோள்கள்