சீன பௌத்த யாத்தீகர் யுவான் சுவாங் பொ.ஊ. 641-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சூரியக் கோயிலில் சிவன், கௌதம புத்தர் சன்னதிகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[7] பாரசீக வரலாற்று அறிஞர் அல்-பிருனி பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் முல்தான் நகரத்திற்கு வருகை புரிந்த போது இச்சூரியக் கோயிலை பற்றி விவரித்துள்ளார்.
முல்தான் சூரியக் கோவிலை அழித்தல்
பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சாப் பகுதியை ஆட்சி செய்த இசுலாமிய ஆட்சியாளர்கள் இச்சூரியக் கோயில வளாகத்தில் மசூதி மற்றும் முல்தான் நகரத்தையும் எழுப்பினர்.[8] 11-ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது இச்சூரியக் கோயிலை முற்றிலும் சிதைத்து அழித்தான்.[8] இக்கோயில் இசுலாமியர்களால் சிதைக்கப்பட்டதால் இந்துக்கள் இச்சூரியக் கோயிலுக்கு வருகை தருவதை நிறுத்தினர் என அல்-பிருனி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[9]
↑[1]பரணிடப்பட்டது 2016-02-01 at the வந்தவழி இயந்திரம் Survey & Studies for Conservation of Historical Monuments of Multan. Department of Archeology & Museums, Ministry of Culture, Government of Pakistan.
↑Wink, Andre (2002). Al-Hind, the Making of the Indo-Islamic World: Early Medieval India and the Expansion of Islam 7Th-11th Centuries. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780391041738.