தோரிசு தவோவு(Doris Daou) (பிறப்பு: 1964)[1] ஓர் இலெபனானில் பிறந்த கனடிய வானியலாளர் ஆவார். இவர் கல்வி, பரப்புரை சார்ந்து நாசாவுக்காகப் பணிபுரிகிறார். இவர் நாசா நிலா அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநராவார்.[2] இவர் மேலும் நாசாவின் கோள்தேட்டத்துக்கான சிறுபுத்தாக்கத் (SIMPLEx) திட்டத் தொடர்பாளர் ஆவார்".[3]
இளமையும் கல்வியும்
தவோவின் குடும்பம் இவரது குழந்தைப் பருவத்திலேயே போரால் பீடிக்கப்பட்ட இலெபனானில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தது.[சான்று தேவை] இவர் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று, மாறும் விண்மீன்களின் வளிமண்டல அளபுருக்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1]
வாழ்க்கைப்பணி
இவர் பிறகு அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து, பால்டிமோருக்கு சென்று, அங்கு 9 ஆண்டுகள் அபுள் விண்வெளித் தொலைநோக்கியில் பணிசெய்தார். பின்னர், இவர் சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கியை ஏவும் ஆயத்தப் பணிக்காக மாற்றப்பட்டார்.[4] இங்கு இவர் கல்விப் பணியிலும் மக்கள் பரப்புரைப் பணியிலும் ஈடுபட்டார்.[2]
இவர் அமெசு ஆராய்ச்சி மையத்தில் பரப்புரை, கல்வி வல்லுனராக வேலை செய்துள்ளார்.[5][6] மேலும் நாசாவின் நல்கைத் திட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார்.[3]
இப்போது தவோவு வாசிங்டன் டி. சி யில் நாசா தலைமையக வானியலாளராக உள்ளார்[7] இவர் வானியலாளரைக் கேளுங்கள் காணொளிப் படத் திட்டத்தை வடிவமைத்து தயாரித்துள்ளார்.[8] இவர் தொடர்ந்து அறிவியல் இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.[9][10][11]
இவர் பிரெய்லியில் 2008 இல் வெளியிடப்பட்ட கட்புலனாத வானத்தைத் தொட்டுப் பாருங்கள் (Touch the Invisible Sky) எனும் நூலின் இணையாசிரியர் ஆவார்.[12]
↑ 1.01.1"SIRTF Profiles: Doris Daou". Spitzer Space Telescope. NASA. Archived from the original on 11 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017. I was only five years old... They are walking on the moon, she said." "My journey started at the University of Montreal, where I completed my degree. I worked on determining the atmospheric parameters of a group of pulsating stars.{{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑"Profiles: Doris Daou". legacy.spitzer.caltech.edu. August 2001. Archived from the original on ஜூலை 11, 2010. பார்க்கப்பட்ட நாள் January 9, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)