Share to: share facebook share twitter share wa share telegram print page

பீகார்

பிகார்
बिहार

பீகார் அரசு சின்னம்
பண்: மேரே பாரத் கே காந்த் ஹார் (என் இந்தியாவின் மாலை)
இந்தியாவில் பிகாரின் அமைவிடம்
இந்தியாவில் பிகாரின் அமைவிடம்
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
நிறுவப்பட்ட நாள்22 மார்ச்சு 1912(பீகார் நாள்)
மாநிலமாக்கப்படல்26 சனவரி 1950
தலைநகரம் மற்றும்
மிகப்பெரிய நகரம்
பட்னா
மாவட்டங்கள்38
அரசு
 • நிர்வாகம்பீகார் அரசு
 • ஆளுநர்பாகு சவுகான்
 • முதலமைச்சர்நிதிஷ் குமார்
 • சட்டமன்றம்ஈரவை முறைமை
சட்ட மேலவை 75
சட்டப் பேரவை 243
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 • உயர் நீதிமன்றம்பாட்னா உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்94,163 km2 (36,357 sq mi)
 • பரப்பளவு தரவரிசை13வது
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்10,38,04,637
 • தரவரிசை3-ஆவது
 • அடர்த்தி1,102/km2 (2,850/sq mi)
இனம்பிகாரி
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
UN/LOCODEINBR
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR
ம.மே.சு.Increase 0.447[2] (low)
ம.மே.சு. தரவரிசை16-ஆவது (2010)
படிப்பறிவு[3]63.8% (மொத்தம்)
73.5% (ஆண்)
53.3% (பெண்)
அதிகாரபூர்வ மொழிஇந்தி[4]
மேலதிக அதிகார மொழிஉருது[5]
இணையதளம்gov.bih.nic.in
சின்னங்கள்
சின்னம்
பீகார் அரசு சின்னம்
பாடல்மேரே பாரத் கே காந்த் ஹார்
விலங்கு
இந்தியக் காட்டெருது
பறவை
சிட்டு
மீன்நடைகேட்ஃபிஷ்
மலர்
மலையாத்தி
மரம்
அரச மரம்

பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து சார்க்கண்டு மாநிலம் உருவாக்கப்பட்டது.

வரலாறு

பிகார் முற்காலத்தில் அதாவது பொ.ஊ.மு. 600ல் துவங்கி மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

கல்வி

பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது. [6]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 (0.24 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், போஜ்புரி, உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.[7]

பொருளாதாரம்

கங்கை ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.

மாவட்டங்கள்

பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[8] மாவட்டங்கள் விவரம்;

  1. அரரியா மாவட்டம்
  2. அர்வல் மாவட்டம்
  3. அவுரங்காபாத் மாவட்டம்
  4. ககரியா மாவட்டம்
  5. கட்டிஹார் மாவட்டம்
  6. கயா மாவட்டம்
  7. கிசன்கஞ்சு மாவட்டம்
  8. கிழக்கு சம்பாரண் மாவட்டம்
  9. கைமுர் மாவட்டம்
  10. சமஸ்திபூர் மாவட்டம்
  11. சஹர்சா மாவட்டம்
  12. சிவஹர் மாவட்டம்
  13. சீதாமரி மாவட்டம்
  14. சீவான் மாவட்டம்
  15. சுபவுல் மாவட்டம்
  16. ஜகானாபாத் மாவட்டம்
  17. தர்பங்கா மாவட்டம்
  18. நவாதா மாவட்டம்
  19. பக்சர் மாவட்டம்
  20. பட்னா மாவட்டம்
  21. பாகல்பூர் மாவட்டம்
  22. பாங்கா மாவட்டம்
  23. பூர்ணியா மாவட்டம்
  24. பேகூசராய் மாவட்டம்
  25. போஜ்பூர் மாவட்டம்
  26. மதுபனி மாவட்டம்
  27. மதேபுரா மாவட்டம்
  28. முங்கேர் மாவட்டம்
  29. முசாபர்பூர் மாவட்டம்
  30. மேற்கு சம்பாரண் மாவட்டம்
  31. ரோத்தாஸ் மாவட்டம்
  32. லக்கிசராய் மாவட்டம்
  33. வைசாலி மாவட்டம்
  34. ஷேக்புரா மாவட்டம்
  35. ஜமூய் மாவட்டம்
  36. நாலந்தா மாவட்டம்
  37. சரண் மாவட்டம்
  38. கோபால்கஞ்ச் மாவட்டம்

ஆன்மிகத் தலங்கள்

கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும்.

போக்குவரத்து

தொடருந்து

கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[9]

வானூர்தி நிலையம்

பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம் [10] இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.[11]

தேசிய நெடுஞ்சாலைகள்

புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "census of india". Census of India 2001. இந்திய அரசு. 27 May 2002. Archived from the original on 3 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2007. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "Inequality- Adjusted Human Development Index for India's States". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். Archived from the original on 7 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Literacy Rate in India". Indiaonlinepages.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016.
  4. "The Bihar Official Language Act, 1950" (PDF). Cabinet Secretariat Department, Government of Bihar. 1950. Archived from the original (PDF) on 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Benedikter, Thomas (2009). Language Policy and Linguistic Minorities in India: An Appraisal of the Linguistic Rights of Minorities in India. Münster: LIT Verlag. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783643102317. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2015. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  6. Bihar Population Census data 2011
  7. "National Commissioner Linguistic Minorities". Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10.
  8. "List of Districts of Bihar". Archived from the original on 2009-08-09. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  9. http://indiarailinfo.com/arrivals/patna-junction-pnbe/332
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  11. http://www.expedia.co.in/vc/cheap-flights/patna-airport-pat/

வெளி இணைப்புகள்

அரசாங்கம்
பொது தகவல்கள்


Read other articles:

Dorothy FarnumDari sebuah majalah tahun 1921Lahir10 Juni 1900New York City Amerika SerikatMeninggalNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). (aged Kesalahan ekspresi: Operator < tak terduga)Andover Utara, Massachusetts Amerika SerikatPekerjaanPenulis naskahPemeranTahun aktif1913–1934 Dorothy Farnum (10 Juni 1900 – 27 Januari 1970) adalah seorang penulis naskah Amerika Serikat. Ia dikenal karena karyanya di Metro-...

 

 

鬼滅の刃 > 鬼滅の刃 (アニメ) 鬼滅の刃 ジャンル ダーク・ファンタジー アニメ 原作 吾峠呼世晴 監督 外崎春雄 シリーズ構成 ufotable 脚本 ufotable キャラクターデザイン 松島晃 音楽 梶浦由記、椎名豪 アニメーション制作 ufotable 製作 アニプレックス集英社、ufotable 放送局 竈門炭治郎 立志編:TOKYO MXほか無限列車編以降:フジテレビ系列ほか 放送期間 竈門炭治郎 立...

 

 

NGC 881   الكوكبة قيطس  رمز الفهرس NGC 881 (الفهرس العام الجديد)PGC 8822 (فهرس المجرات الرئيسية)2MASX J02184528-0638208 (Two Micron All Sky Survey, Extended source catalogue)6dFGS gJ021845.3-063821 (6dF Galaxy Survey)AGC 420064 (Arecibo General Catalog)GSC 04696-01011 (دليل النجم المفهرس)IRAS F02162-0652 (IRAS)MCG-01-06-089 (فهرس المجرات الموروفولوجي)LEDA 8822 (ليون-ميودون قاعد

Seorang penderita Miastenia gravis Miastenia Gravis (MG) adalah penyakit autoimun kronis dari transmisi neuromuskular yang menghasilkan kelemahan otot. Istilah Myasthenia adalah bahasa Latin untuk kelemahan otot, dan Gravis untuk berat atau serius.[1] Myasthenia Gravis termasuk salah satu jenis penyakit autoimun. Menurut kamus kedokteran, penyakit autoimun adalah suatu jenis penyakit dengan antibodi menyerang jaringan-jaringannya sendiri. Myasthenia Gravis dapat menyerang berbagai oto...

 

 

село Мордовсько-Маскинські Виселки рос. Мордовско-Маскинские Выселкиерз. Мокшень Масканя Країна  Росія Суб'єкт Російської Федерації Мордовія Муніципальний район Єльниківський район Поселення Мордовсько-Маскинське Код ЗКАТУ: 89218850001 Код ЗКТМО: 89618450101 Основні дані Нас�...

 

 

County in Gangwon-do, South Korea Not to be confused with Pyongyang or Pyonggang County. Pyeongchang redirects here. For other uses, see Pyeongchang (disambiguation). County in Gangwon-do, South KoreaPyeongchang 평창군CountyKorean transcription(s) • Hangul평창군 • Hanja平昌郡 • Revised RomanizationPyeongchang-gun • McCune-ReischauerP'yŏngch'ang-gun[1]Alpensia Resort and a wind farm in Pyeongchang FlagEmblem of PyeongchangE...

Este artículo se refiere al mártir decapitado hacia el año 286 (fiesta del 11 de agosto). Para el cuñado de Santa Cecilia, véase Tiburcio, Valeriano y Máximo. Tiburcio Tiburcio caminando sobre las brasasNacimiento mileniojuliano Fallecimiento siglo IIIRoma (Imperio romano) Causa de muerte Decapitación Sepultura Vía Apia Padre Cromacio de Roma Información religiosaCanonización  Culto inmemorialFestividad 11 de agostoVenerado en Iglesia católicaIglesia ortodoxaIglesias ort...

 

 

Agnes ObelObel saat tampil di Sentrum Scene di Oslo (2020)Lahir28 Oktober 1980 (umur 43)Gentofte, Copenhagen, DenmarkPekerjaanPenyanyipenulis lagumusisiKarier musikGenreChamber popneo-klasikjazzInstrumenVokalpianoTahun aktif1990–sekarangLabelPIAS RecordingsDeutsche Grammophon/Universal ClassicsSitus webwww.agnesobel.com Agnes Caroline Thaarup Obel (lahir 28 Oktober 1980)[1] adalah seorang penyanyi, penulis lagu, dan musisi asal Denmark. Album pertamanya, Philharmonics, dirilis ...

 

 

Film Titel Star Trek Into Darkness Produktionsland Vereinigte Staaten Originalsprache Englisch Erscheinungsjahr 2013 Länge 127 Minuten Altersfreigabe FSK 12[1] JMK 12[2] Stab Regie J. J. Abrams Drehbuch Alex Kurtzman,Roberto Orci,Damon Lindelof Produktion J. J. Abrams,Bryan Burk,Alex Kurtzman,Roberto Orci,Damon Lindelof Musik Michael Giacchino Kamera Daniel Mindel Schnitt Maryann Brandon,Mary Jo Markey Besetzung Chris Pine: Capt. James T. Kirk Zachary Quinto: Cmdr. Spock...

International sporting eventSwimming at the2007 Pan American GamesFreestyle50 mmenwomen100 mmenwomen200 mmenwomen400 mmenwomen800 mwomen1500 mmenBackstroke100 mmenwomen200 mmenwomenBreaststroke100 mmenwomen200 mmenwomenButterfly100 mmenwomen200 mmenwomenIndividual medley200 mmenwomen400 mmenwomenFreestyle relay4×100 mmenwomen4×200 mmenwomenMedley relay4×100 mmenwomenvte Main article: Swimming at the 2007 Pan American Games The Women's 200m freestyle at the 2007 Pan American Games occurred ...

 

 

Palais des ducs de Lorraine à Nancy. Le duché de Lorraine est né du partage de la Lotharingie en 959 par le duc Brunon de Cologne. Celui-ci confie la partie méridionale du duché au vice-duc Frédéric de Bar qui prend le titre de duc de Haute-Lotharingie en 977. Au fil du temps, cette entité politique devient le duché de Lorraine, mentionné comme tel dès 1067[1], qui perdure jusqu'en 1766, date de l'annexion par la France. Histoire Article détaillé : Duché de Lorraine. Cette ...

 

 

20th-century British multinational industrial conglomerate company BTR PLC LimitedTypePublic limited companyIndustryConglomeratePredecessorThe Leyland & Birmingham Rubber Founded1924Defunct1999FateMerged with SiebeSuccessorInvensysHeadquartersLondon, United KingdomKey peopleSir David Nicolson, (Chairman)Sir Owen Green, (CEO) & (Chairman)Alan Jackson, (CEO)Revenue£10 billion (1995)[1]Number of employees~130,000 (1995)[1][2]SubsidiariesDunlop Holidngs plcNy...

У Вікіпедії є статті про інші населені пункти з такою назвою: Широка Гребля. село Широка Гребля Країна  Україна Область Вінницька область Район Хмільницький район Громада Самгородоцька сільська громада Код КАТОТТГ UA05120130200096212 Основні дані Засноване 1820 Населення 770 Пло...

 

 

John HazzidakisBornApril 13, 1844Myrthios Rethymno, Crete, Ottoman EmpireDied1921(1921-00-00) (aged 76–77)Athens, GreeceNationalityGreekAlma materUniversity of AthensKnown forHazzidakis transformChildrenGeorgios HatzidakisNikolaos HatzidakisScientific careerFieldsClassical Mechanics PhysicsMathematicsInstitutionsUniversity of AthensDoctoral advisorsVassilios Lakon Ioannis John N. Hazzidakis (Ιωάννης Χατζιδάκις, or Hatzidakis or Chatzidakis, April 13, 1844 –...

 

 

1928 film The Orchid DancerGerman posterDirected byLéonce PerretWritten byJean-Joseph Renaud (novel)StarringLouise LagrangeRicardo CortezXenia DesniCinematographyLéonce-Henri BurelRené ColasJacques MontéranProductioncompanyFranco FilmsDistributed byFranco FilmsRelease date April 29, 1928 (1928-04-29) Running time60 minutesCountryFranceLanguagesSilent French intertitles The Orchid Dancer (French: La danseuse Orchidée) is a 1928 French silent drama film directed by Léonce P...

Campeonato Mundial deEsportes Aquáticos de 2011Saltos ornamentaisIndividual1 mMasculinoFeminino3 mMasculinoFeminino10 mMasculinoFemininoSincronizado3 mMasculinoFeminino10 mMasculinoFemininoMaratona aquática5 kmMasculinoFeminino10 kmMasculinoFeminino25 kmMasculinoFeminino4×1,25 km MistoNataçãoLivre50 mMasculinoFeminino100 mMasculinoFeminino200 mMasculinoFeminino400 mMasculinoFeminino800 mMasculinoFeminino1500 mMasculinoFemininoCostas50 mMasculinoFeminino100 mMasculinoFeminino200 mMasculin...

 

 

2003 video gameMidnight Club IIDeveloper(s)Rockstar San DiegoPublisher(s)Rockstar GamesDirector(s)Steven OldsProducer(s)Jay PanekProgrammer(s)Ted CarsonMark RotenbergArtist(s)Scott StoabsDavid HongSeriesMidnight ClubPlatform(s)PlayStation 2XboxWindowsReleasePlayStation 2NA: April 8, 2003[2][3]EU: May 2, 2003[1]XboxNA: June 4, 2003[5]EU: June 20, 2003[4]Microsoft WindowsNA: July 1, 2003[7]EU: July 11, 2003[6]Genre(s)RacingMode(s)Single-pl...

 

 

Succession in which a king's brothers inherit over sons This article relies largely or entirely on a single source. Relevant discussion may be found on the talk page. Please help improve this article by introducing citations to additional sources.Find sources: Agnatic seniority – news · newspapers · books · scholar · JSTOR (April 2019) Agnatic seniority diagram Agnatic seniority is a patrilineal principle of inheritance where the order of succession to...

Emirati low-cost carrier Air Arabia IATA ICAO Callsign G9 ABY ARABIA[1] Founded3 February 2003; 20 years ago (2003-02-03)Commenced operations28 October 2003 (2003-10-28)Hubs Sharjah International Airport Abu Dhabi International Airport Ras Al Khaimah International Airport Frequent-flyer programAirRewardsAllianceArab Air Carriers' OrganizationSubsidiaries Air Arabia Abu Dhabi Air Arabia Egypt Air Arabia Maroc Fly Arna Fly Jinnah Fleet size64Destinations...

 

 

Bagian dari seri tentang Pandangan Kristen Kristus Kristologi Nama dan Gelar Riwayat Hidup Injil Keselarasan Injil Petilasan Beribunda Perawan Kelahiran Pembaptisan Karya Pelayanan Khotbah di Bukit Mukjizat Perumpamaan Penistaan Penyaliban Penguburan Kebangkitan Kenaikan Ketaatan Bersemayam di Surga Perantaraan Kedatangan Ke-2 Relikui Isa (Pandangan Islam) Almasih Injil Maryam Hawariyun Wafat Almahdi Hari Kiamat Pusara Latar Belakang Latar Belakang Perjanjian Baru Bahasa Tutur Yesus Ras Yesus...

 

 

Kembali kehalaman sebelumnya