சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി),
இந்தியாவின்கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.[1]
நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.
புதுப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, பொன்னானி சாமூத்திரிகளின் முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
வரலாறு
கோழிக்கோடு அரசு கி பி 826-இல் நெடுயிரிப்பு சுவரூபம் எனும் பெயரில் நிறுவப்பட்டது. கோழிக்கோடு நகரம் 1026 நிறுவப்பட்டது. 1766 - 1792-ஆம் ஆண்டுகளுக்கிடையே கோழிக்கோடு அரசு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கோழிக்கோடு அரசை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. [2]