Share to: share facebook share twitter share wa share telegram print page

மிலேச்ச அரசமரபு


மிலேச்ச அரசமரபு
கி பி 650–கி பி 900
தலைநகரம்ஹட்பேஷ்வர் (தற்கால தேஜ்பூர் அசாம் (Tezpur)
சமயம்
பல தெய்வ வழிபாடு
அரசாங்கம்முடியாட்சி
மகாராஜாதிராஜன் 
• 650 - 670
சாலாஸ்தம்பா
• 815 – 832
ஹர்ஜாரவர்மன்
• 890 – 900
தியாகசிம்மன்
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• தொடக்கம்
கி பி 650
• முடிவு
கி பி 900
முந்தையது
பின்னையது
[[வர்மன் அரசமரபு]]
[[பால அரசமரபு]]

மிலேச்ச அரசமரபு (Mlechchha dynasty)[1] வர்மன் அரசமரபிற்குப் பின்னர், கி பி 650 முதல் 900 முடிய காமரூப பேரரசை, ஹடபேஷ்வர் நகரை (தற்கால தெஸ்பூர், அசாம் (Tezpur) தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். மிலேச்ச அரசமரபினர் நரகாசுரன் வழித்தோன்றல்கள் என்று கூறி கொள்கின்றனர். மிலேச்ச அரசமரபை மன்னர் சாலாஸ்தம்பா கி பி 650இல் நிறுவினார். இறுதி மிலேச்ச மன்னர் தியாக சிம்மன் கி பி 900 வரை ஆண்டார். மிலேச்ச அரசமரபிற்கு முன் காமரூப நாட்டை வர்மன் அரச குலத்தினர் கி பி 350 முதல் 650 முடிய ஆண்டனர்.

மிலேச்ச அரசமரபிற்கு பின் காமரூப நாட்டை பால வம்சத்தினர் ஆண்டனர்.

மிலேச்ச ஆட்சியாளர்கள்

  • சாலாஸ்தம்பா (650-670)
  • விஜயா என்ற விக்கிரஹஸ்தம்பா
  • ஹர்சதேவா என்ற ஹர்சவர்மன் (725-745)
  • இரண்டாம் பாலவர்மன்
  • சலம்பன் [2]
  • ஹர்ஜாரவர்மன் (815-832)
  • வனமால வர்மதேவன் (855-860)
  • ஜெயமாலன் என்ற வீரபாகு (855-860)
  • மூன்றாம் பாலவர்மன் (860-880)
  • தியாகசிம்மன் (890-900)

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Though mlechchha is a derogatory word, Harjaravarman, a king of this dynasty explains the term (though illegible) in the Hayunthal copper plates (Sharma 1978, ப. 91).
  2. Pralambha, read from the Tezpur plates, can be corrected to Salambha, in light of the Parbatiya plates, (Sarma 1978, p. 105)

மேற்கோள்கள்

  • Bhattacharjee, J. B. (1992), "The Kachari (Dimasa) state formation", in Barpujari, H. K. (ed.), The Comprehensive History of Assam, vol. 2, Guwahati: Assam Publication Board, pp. 391–397
  • Sharma, M M (1978), Inscriptions of Ancient Assam, Guwahati: Gauhati University
  • Sircar, D. C. (1990), "The Mlechchha Dynasty of Salasthambha", in Barpujari, H. K. (ed.), The Comprehensive History of Assam, vol. 1, Guwahati: Assam Publication Board
Kembali kehalaman sebelumnya